விழுப்புரம்: தனிமை வாட்டியதால் பெண் தற்கொலை!

24 November 2025

விழுப்புரம்: தனிமை வாட்டியதால் பெண் தற்கொலை!


விழுப்புரம்: திண்டிவனம் அருகேயுள்ள சஞ்சீவிராயன்பேட்டை பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மனைவி உமா.

முருகன் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். அதைத்தொடர்ந்து தனியாக வசித்து வந்த உமா விரக்தியில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் 
ஆ.ஆகாஷ், விழுப்புரம்