கடலில் குளிக்கச் சென்ற மாணவர் நீரில் மூழ்கிய உயிரிழப்பு

11 October 2025

திண்டுக்கலை சேர்ந்த கவி பிரகாஷ், கேரளாவை சேர்ந்த முகமது ஆதில், உத்திரபிரதேசத்தை சேர்ந்த ரோகித் சந்திரா உள்ளிட்ட 14 மாணவர்கள் இன்று காலை பெசன்ட் நகர் கடற்கரையில் கடலில் குளிக்க சென்றனர். அப்போது கடலில் ராட்சத அலையில் மூன்று பேரும் சிக்கி கடலின் ஆழத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்த மற்ற மாணவர்கள் கூச்சலிடமே அங்கிருந்த மீனவர்கள் கடலில் இறங்கி மூழ்கியவர்களை மீட்டுக் கொண்டு வந்தனர். 


ஆனால் துரதிர்ஷ்டவசமாக பிரகாஷ் உயிரிழந்தார். முகமது ஆதில் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து அங்கு வந்த சாஸ்திரி நகர் போலீசார் பிரகாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.