எடப்பாடி பழனிசாமிக்கு இனி தோல்விதான்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

07 February 2026

விருதுநகரில் நடைபெற்ற திமுக இளைஞரணியின் தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணிக்குத் தோல்வியே மிஞ்சும் என்று தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், தமிழகத்திற்கு பூஜ்ஜியம் வழங்கியவர்களுக்குத் தேர்தலில் மக்கள் அதே பூஜ்ஜியத்தையே பதிலாகத் தருவார்கள் என்றும், சுயநலத்திற்காகச் செயல்படும் பழனிசாமிக்கு இனி வரும் காலங்களில் தோல்வி மட்டுமே பரிசாகக் கிடைக்கும் என்றும் விமர்சித்தார்.


திராவிட மாடல் அரசின் ஐந்தாண்டு சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து, வரும் தேர்தலில் திமுக இதுவரை கண்டிராத மிகப்பெரிய வெற்றியைப் பெற இளைஞரணியினர் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் அவர் இதன்போது வேண்டுகோள் விடுத்தார்.