பழைய ஓய்வூதியம் திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்படுமா???

02 January 2026

தமிழ்நாட்டில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வுதே திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வு புதிய திட்டம் ஆகிய ஓய்வூதியத் திட்டங்களின் சாத்திய கூறுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரி சுகன்திப்சிங் பேடி தலைமையில் கடந்த பிப்ரவரி மாதம் குழு அமைக்கப்பட்டது. 

இந்த குழு தொடர்ந்து ஆலோசனை நடத்தி கடந்த அக்டோபர் மாதம் ஓய்வூதியத் திட்டங்கள் தொடர்பான இடைக்கால அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்தது. 

இந்த திட்டம் தொடர்பான இறுதி அறிக்கையை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இடம் ஊரக வளர்ச்சி துறையின் கூடுதல் தலைமை செயலாளரும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான சுகன்தீப்சிங் பேடி தலைமையிலான குழுவினர் கடந்த 30ஆம் தேதி சமர்ப்பித்தனர்.

இந்த நிலையில் இந்த திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நாளை முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது...