நேஷனல் ஹெரால்டு வழக்கில் எதிர்த்து கட்சி தலைவர்களை குறி வைத்துள்ளது பாஜக: மு க ஸ்டாலின்

16 December 2025

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில் 

நேஷனல் ஹெரால்டு வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர்களை குறி வைத்து மத்திய பாஜக அரசு மத்திய அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது. இதனை நீதித்துறை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தி உள்ளது என தெரிவித்தார். மேலும் உண்மை அவர்கள் பக்கம் இருப்பதால் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி நிரபராதிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளனர். மேலும் மத்திய அரசின் பழிவாங்கும் அணுகு முறையால் புலனாய்வு அமைப்புகளின் நம்பகத் தன்மைக்கு களங்கம் ஏற்படுகிறது. அவற்றை அரசியல் மிரட்டலுக்கான கருவிகளாக மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது என தெரிவித்துள்ளார்....