 
	 
								பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை திருகொட்டகை முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாளை ஐப்பசி மாதம் 14ஆம் தேதி அக அக்டோபர் 31ஆம் தேதி வெள்ளிக்கிழமை தசமி திதி அவிட்டம் நட்சத்திரம் தனுர் லக்னத்தில் காலை 9:35 மணி முதல் 10:30 மணிக்குள் வைகுண்ட ஏகாதசி திருநாள் 2025- 26 திருக்கொட்டகை தம்ப ஸ்தாபனம் அதாவது முகூர்த்த கால் நடுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது...