உலகப் புகழ்வாய்ந்த ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில்

01 December 2025

தமிழ்நாட்டின் மத்தியில் அமைந்துள்ள திருச்சியில் நூற்றுக்கணக்கான கோவில்கள் அமைந்துள்ளன. இங்குள்ள ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அதில் முதன்மையான கோவில்தான் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவில். 

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் பூலோகத்தின் வைகுண்டம் என்று அனைவராலும் போற்றப்படுகிறது. மேலும் இந்த கோவில் 108 வைணவ திருத்தளங்களில் முதன்மையான கோவில் ஆகும். இந்த கோவிலுக்கு பல்வேறு சிறப்புகள் உண்டு.

அயோத்தியின் மன்னனாக ஸ்ரீராமர் முடி சூடும் விழாவிற்கு வருகை தந்த விபீஷணனுக்கு ஸ்ரீ நாராயணனின் சிலையை ராமர் பரிசளித்தார். அதைப் பெற்றுக் கொண்டு திரும்பும் வழியில் விபீஷணன் இடையன் உருவில் இருந்த விநாயகர் நாராயணனின் சிலையை கொடுத்து அதை எக்காரணம் கொண்டும் கீழே வைக்கக்கூடாது எனக் கூறி காவேரி நதிக்கு சென்றார். மேலும் விபீஷணன் வருவதற்கு நேரம் ஆகவே சிலையை விநாயகர் கீழே வைத்து விட்டு சென்று விட்டார். அப்போது அதை அறிந்த விபீஷணன் சிலையை அகற்ற முயற்சித்த போது நாராயணன் அசரீரியாக வந்து தான் இங்கேயே இருக்க விரும்பு விரும்புவதாக கூறியுள்ளார். பின்னர் விபீஷணனும் இலங்கையை பார்த்த வாரே வீற்றிருக்க வேண்டும் என சுவாமியிடம் வாக்கு பெற்றுக் கொண்டார். இவ்வாறு உருவாகிய கோவில்தான் இந்த ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவில்.

இந்த கோவில் 5000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான கோவில் ஆகும். மேலும் இந்த கோவிலின் ராஜகோபுரம் 72 மீட்டர் உயரத்துடன் தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய கோபுரமாக விளங்குகிறது.


இந்த கோவில்  ஏறத்தாழ  156  ஏக்கர் பரப்பளவு  கொண்டது. மேலும் நாட்டிலேயே மிகப்பெரிய கோவில்களில் ஒன்றாக இந்த கோவில் திகழ்ந்து வருகிறது தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் ஒன்று ஆகும். மேலும் கோவிலின் கருவறை விமானம் நீள் வட்ட வடிவில் தங்கத்தால் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த கோவில் கட்டுவதற்காக 1.7 கோடி செங்கற்கள், 20000 டன் மணல், ஆயிரம் டன் கருங்கல், 12000 டன் சிமெண்ட், 130 டன் இரும்பு கம்பிகள் மற்றும் 8000 டன் வர்ண பூஜை உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளன. 

ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும். மார்கழி மாத வளர்பிறையில் நடைபெறும் இந்த விழா உலகத்திலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு விழாவாக 21 நாட்கள் கொண்டாடப்படுகின்றன. இதில் பகல் பத்து ராப்பத்து உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்ற பின்னர் இறுதியாக சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடைபெறும். இந்த சொர்க்கவாசல் திறப்பு விழாவை காண்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருகின்றனர். 



ஆசிய பசிபிக் மண்டலத்தில் உள்ள 10 நாடுகளில் உள்ள கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் அமைப்புகள் குறித்த அறிக்கைகளை ஆய்வு செய்த யுனைசுகோ அமைப்பு, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்கு கலாச்சார பாரம்பரியம் போன்றவற்றை பழமை மாறாமல் பாதுகாத்ததற்கான விருதை கடந்த 2017 ஆம் ஆண்டு வழங்கி சிறப்பித்தது.

இவ்வாறாக இந்த கோவிலின் சிறப்பை இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இத்தகைய பெருமைமிக்க இந்த கோவில் இன்று மட்டும் இன்றி எப்போதும் நமது தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தை வரும் சந்ததிகளுக்கு எடுத்துரைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ...