பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீ அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் மார்கழி மாதம் தொடங்கியதில் இருந்தே அருள்மிகு ஆண்டாள் நாச்சியாருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு மார்கழி மாதம் தொடங்கியதில் இருந்தே ஆண்டாள் நாச்சியார் ஒவ்வொரு கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக மார்கழி மாத ஏழாம் திருநாள் ஆன இன்று ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் பரமபத நாதர் சன்னிதியில் உற்சவர் கே சி வதம் திருக்கோலத்தில் எழுந்தருளி காட்சியளித்தார். இதனைத் தொடர்ந்து அங்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன...
இந்த நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள், கோவிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர்...