அண்மையில் நிலவிய டிட்வா புயலால் இலங்கை பெருமளவு பாதிக்கப்பட்டது.
இதனால் கடும் இழப்புகளை சந்தித்துள்ள இலங்கைக்கு உதவிட இந்தியா முன் வந்துள்ளது. அதன்படி இலங்கைக்கு உதவிடும் வகையில் இந்திய அரசு ஆபரேஷன் சாகர் பந்த் என்ற திட்டத்தின் கீழ் நிவாரண உதவிகளை செய்து வரும் நிலையில் பிரதமர் மோடியின் சிறப்பு தூதராக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் இலங்கை சென்று அங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து அங்கு இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசான் நாயக்கவை சந்தித்தார்.
மேலும் இந்தியா சார்பில் இலங்கைக்கு ரூபாய் 4000 கோடி நிதி உதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.