இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக வரலாறு காணாத பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில் தற்போது புயல் உருவாகியுள்ளதால் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டுள்ளன.
மேலும் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. மேலும் இதுவரை இலங்கையில் கனமழையில் சிக்கி 153 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 200 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நிலச்சரிவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு உதவிடும் வகையில் இந்தியா முன் வந்துள்ளது. மேலும் இதன்படி பேரிடர் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.