ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரையொட்டி 10 அணிகளும் டிரேடிங் மற்றும் தக்க வைக்கப்பட்ட, விடுவிக்கப்பட்ட வீரர்களின் லிஸ்டை வெளியிட்டுள்ளது.
இதுவரை மும்பை அணிக்காக விளையாடி வந்த சச்சின் மகன் அர்ஜுன் தற்போது லக்னோ அணிக்கு டிரேடிங் முறையில் சென்றுள்ளார்
இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன் டெண்டுல்கர் 2021 சீசனின்போது ரூ. 20 லட்சத்திற்கு மும்பை அணியால் வாங்கப்பட்டார்.2022 மெகா ஏலத்தின்போது அர்ஜுனை ரூ. 30 லட்சத்திற்கு மும்பை அணி ஒப்பந்தம் செய்தது.2023 ஐபிஎல் தொடரில் விளையாடிய அர்ஜுன் டெண்டுல்கர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் 13 ரன்கள் எடுத்திருக்கிறார்.
இந்நிலையில் அணி மாறினாலும் அர்ஜுன் டெண்டுல்கரின் சம்பளத்தில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.
அவரை லக்னோ அணி 2026 ஐபிஎல் தொடருக்காக ரூ. 30 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது.
சச்சின் டெண்டுல்கர் இவருடைய மகன் என்பதனாலே இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் விமர்சனங்களும் வந்து கொண்டிருந்தது.. லக்னோ அணியில் விளையாட இருக்கும் அவருக்கு நீ நல்ல வாய்ப்பு கிடைக்க வேண்டும் சிறப்பாக செயல்படுவார் என்று நம்பிக்கை உள்ளது....
---PS Parthi