முகப்பு இந்தியா கடைசி நாளில் மண்டியிடும் என்று பேசிய தென்னாப்பிரிக்க அணி பயிற்சியாளர் கான்ராட்க்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்தியா மண்டியிடும் என்று சொன்ன SA கோச்..விளக்கம் அளித்த பவுமா.. "இந்திய வீரர்களும் எல்லை மீறினாங்க"
கிரிக்கெட் வரலாற்றில் Grovel என்ற வார்த்தை ஏற்கனவே பெரிய புயலை கிளப்பி இருக்கிறது.
1976 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அப்போது பேசிய இங்கிலாந்து அணி கேப்டன் டோனி கிரேக், இந்த போட்டியில் நாங்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியை மண்டியிட வைப்போம் என்று கூறியிருந்தார்.
இது வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை கடுப்படைய செய்தது. இதனை அடுத்து இங்கிலாந்தை போட்டு நொறுக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 5-0 என்ற கணக்கில் தொடரை வென்று பதிலடி தந்தது. இதனால் இந்த வார்த்தையை பலரும் கிரிக்கெட்டில் பயன்படுத்துவது கிடையாது. ஆனால் தென்னாபிரிக்க அணி பயிற்சியாளர் நேற்று இந்திய அணி மண்டியிடும் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது குறித்து தென்னாப்பிரிக்க அணி கேப்டன் பவுமாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் பயிற்சியாளர் அந்த வார்த்தையை பயன்படுத்தியது குறுத்து எனக்கு இன்று காலையில் தான் தெரியும். ஆனால் நான் போட்டியில் முழு கவனம் செலுத்தி வந்ததால் பயிற்சியாளரிடம் இதைப் பற்றி நான் பேசவில்லை.
எங்கள் கோச்க்கு 60 வயது ஆகப் போகிறது. நாங்கள் அவர் பேசிய வார்த்தை குறித்து நிச்சயம் அவரிடம் கேட்போம். ஆனால் இந்த தொடரில் இந்தியாவை சேர்ந்த சில வீரர்களும் எல்லை மீறினார்கள். எங்கள் பயிற்சியாளர் எல்லை மீறினார் என்று நான் சொல்லவில்லை. ஆனால் நிச்சயம் இதைப் பற்றி அவர் யோசிப்பார் என பவுமா விளக்கம் அளித்து இருந்தார்
யிற்சியாளர் கான்ராடின் இந்த பேச்சுக்கு அணில் கும்ப்ளே, டெயில் ஸ்டெயின் உள்ளிட்ட வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் டெஸ்டின்போது தென்னாப்பிரிக்க அணி கேப்டன் பவுமாவை பார்த்து இந்திய வீரர் பும்ரா குள்ளன் என்று அழைத்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும் அவர் போட்டி முடிந்தவுடன் பவுமாவை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது...
--PS Parthi