திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் திருவண்ணாமலை கோவிலில் கார்த்திகை தீப திருவிழா சிறப்பாக நடைபெற உள்ளதை ஒட்டி தமிழகம் மட்டும் இன்றி அனைத்து மாநிலங்களிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தர உள்ளனர்.
இந்த நிலையில் மக்கள் திருவண்ணாமலைக்கு பயணம் செய்வதற்கு கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.
அதன்படி திருநெல்வேலியில் இருந்து டிசம்பர் மூன்றாம் தேதி இரவு 9:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 8:30 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடைகின்றது. இதேபோன்று மறு மார்க்கத்தில் திருவண்ணாமலையிலிருந்து நான்காம் தேதி இரவு 7:55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 8:30 மணிக்கு திருநெல்வேலியை சென்றடைகிறது.
இதேபோன்று சென்னை சென்ட்ரலில் இருந்து சென்னை கடற்கரைக்கு வெளிவட்ட ரயில் இயக்கப்படுகிறது. மேலும் விழுப்புரத்தில் இருந்து நவம்பர் 30 டிசம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் காலை 10 10 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத ரயில் அதே நாளில் காலை 11:45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது...
.