மார்கழி மாத சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு உளுந்தூர்பேட்டையில் உள்ள கைலாசநாதர் ஆலயம் மற்றும் ஆதிகேசவ பெருமாள் ஆலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு....

16 December 2025

மார்கழி மாத சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு உளுந்தூர்பேட்டையில் உள்ள கைலாசநாதர் ஆலயம் மற்றும் ஆதிகேசவ பெருமாள் ஆலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு....

உளுந்தூர்பேட்டையில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த கனகவல்லி தாயார் சமேத ஆதிகேச பெருமாள் கோவிலில் மார்கழி 1-ம் தேதியான இன்று அதிகாலை கோ பூஜை நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்...

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு கனகவல்லி தாயார் சமேத ஆதிகேசவ பெருமாள் கோவிலில் மார்கழி 1-ம் தேதியான இன்று அதிகாலை கோ பூஜை நடைபெற்றது அப்பொழுது பூஜை செய்யப்பட்ட பசு மாட்டின் மீது அங்கு திரண்டு இருந்த ஏராளமான பக்தர்கள் மலர்கள் தூவி வழிபட்டனர் தொடர்ந்து மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கனகவல்லி தாயார் சமேத ஆதிகேசவ பெருமாளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்ட பின்பு சங்கல்பம் நடைபெற்றது தொடர்ந்து மலர் மற்றும் துளசி அர்ச்சனை நடைபெற்ற பின்பு மகா தீபாரதனை நடைபெற்றது இதில் உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோஷம் வழங்க பெருமாளை வழி பெற்றனர் தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதமும் துளசி பிரசாதமும் வழங்கப்பட்டது...

உளுந்தூர்பேட்டை அருள்மிகு காமாட்சி அம்மை சமேத கைலாசநாதர் கோவிலில் கோபூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்....

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள அருள்மிகு காமாட்சி அம்மை சமேத கைலாசநாதர் திருக்கோவிலில் மார்கழி மாத ஒன்றாம் தேதியான இன்று அதிகாலை கோபூஜை நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூஜை செய்யப்பட்ட பசு மாட்டின் மீது மலர்கள் தூவி வழிபட்டனர் தொடர்ந்து பசு மாட்டிற்கு தீபாராதனையும் மலர் அர்ச்சனையும் நடைபெற்றது இதைத் தொடர்ந்து மூலவர் கைலாசநாதர் சங்கல்பம் செய்யப்பட்டு மலர் அர்ச்சனை நடைபெற்ற பின்பு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது அப்போது அங்கிருந்த ஏராளமான பக்தர்கள் ஓம் நமச்சிவாய கோஷங்கள் எழுப்பி கைலாசநாதரை வழிபட்டனர்....


இரா.வெங்கடேசன், சப்எடிட்டர், கொற்றவை நியூஸ்