அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை ஶ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது..

19 December 2025

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை ஶ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது..


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கனகவல்லி சமேத ஶ்ரீ ஆதிகேசவ பெருமாள் சன்னதியில் அமைந்துள்ள ஶ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பால் பன்னீர் சந்தனம் திருமஞ்சனம் தேன் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து வண்ண வண்ண மலர்கள் வெண்ணெய், காய்கறி பழங்களாலும் வெள்ளி கவசத்தாலும் அலங்கரிக்கப்பட்ட வீர ஆஞ்சநேயருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது அனுமன் ஜெயந்தியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வீர ஆஞ்சநேயர் சுவாமி தரிசனம் செய்தனர் பக்தர்கள் அனைவருக்கும் கோவில் சன்னிதானத்தில் பிரசாதம் வழங்கப்பட்டது.


இரா.வெங்கடேசன், சப்எடிட்டர், கொற்றவை நியூஸ்