ஊராட்சி மன்றத் தலைவர் மீது தாக்குதல்
25 October 2025
ஊராட்சி மன்றத் தலைவர் மீது தாக்குதல் செயலர் மீது புகார்..
விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியத்தின் வெள்ளையாம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் சரவணன் மீது, வரிவசூல் முறைகேடு புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஊராட்சி செயலர் ராமச்சந்திரன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
நேற்று மாலை நடந்த இந்த சம்பவத்தில், சரவணன் செல்போனால் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காயமடைந்த சரவணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இதுகுறித்து போலீசாரிடமும் , ஊரக வளர்ச்சி துறை அலுவலரிடமும் சரவணன் புகார் அளித்துள்ளார். அதிகாரிகள் துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.