தென்னாப்பிரிக்கா அரேகிப்பா மாகாணம் ஷலா நகரில் இருந்து நேற்று பேருந்து ஒன்று புறப்பட்டது. அந்த பேருந்தில் 50க்கும் மேற்பட்டோர் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் ஷலா நகரில் உள்ள மலைப் பாங்கான பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் மீது பஸ் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகே இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 37 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து சென்ற மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.