மிகவும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த முருகப்பெருமான் சூரசம்காரம் நிகழ்வு திருச்செந்தூர் கோவிலில் இன்று நடைபெற்றது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான இந்த கந்த சஷ்டி திருவிழா நாடு முழுவதும் மிகவும் பிரபலமான ஒரு திருவிழாவாக தற்போது நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் முக்கிய நிகழ்வான முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்வு இன்று மிகவும் உற்சாகமாக நடைபெற்றது. ஒட்டி கடந்த ஒரு வாரமாகவே தொடர்ந்து கோவிலில் பூஜைகள் யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று சூரசம்காரத்தை முன்னிட்டு அதி காலை ஒரு மணிக்கே நடை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அன்னை இடம் இருந்து வேல் பெற்றுக்கொண்ட முருகப்பெருமான் சூரனை வதம் செய்ய போர்க்களத்தில் புறப்பட்டு பின்னர் கடற்கரையில் எழுந்தருளி சூரபத்மனை வதம் செய்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வெற்றிவேல் வீரவேல் என்று முழக்கம் செய்து நிகழ்ச்ச நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.