குமரி: நாகர்கோவில் அருகே சாலையில் தனியாக சென்ற பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர் வீடியோ வெளியாகி பரபரப்பு

06 December 2025

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஸ்டேட் பேங்க் காலனியில்  சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர். இந்த வீடியோ காட்சி வெளியாகி தற்போது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஸ்டேட் பாங்க் காலணியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஹெல்மெட் அணிந்து இருசக்கரத்தில் வாகனத்தில் வந்த மர்ம நபர் சாலையில் செல்போன் பேசியபடி  தனியாக  சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது சுதாரித்துக் கொண்ட பெண் கூச்சலிட்டதால் பெண்ணை தாக்கி விட்டு, தனது இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளார். இந்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ள நிலையில் நேசமணி நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.