படப்பிடிப்பு தளத்தில் முன்னணி நடிகருக்கு ஏற்பட்ட விபத்து

06 January 2026

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமான எஸ்.ஜே. சூர்யா, தற்போது தனது கனவுத் திரைப்படமான 'கில்லர்' (Killer) என்ற படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு சென்னை பாலவாக்கத்தில் நேற்று நடைபெற்று வந்தது.




ஒரு சண்டைக் காட்சியில் 'ரோப்' (Rope) கயிறு உதவியுடன் அவர் நடித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த இரும்பு கம்பியில் மோதி விபத்துக்குள்ளானார். இதில் அவரது இரண்டு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது.



விபத்து நடந்தவுடன் படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டு, அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அவரது காயங்களுக்கு இரண்டு தையல்கள் போடப்பட்டுள்ளன.
மருத்துவர்கள் அவரை 15 நாட்கள் கட்டாய ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

இதன் காரணமாக, 'பான் இந்தியா' திரைப்படமாக உருவாகி வரும் 'கில்லர்' படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.