கொரோனா இரண்டாவது அலை தீவிரம்: தமிழகத்தில் 60 போலீசார் மரணம்!

04 May 2021

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையால் ஆயிரத்து 686 போலீசார் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 808 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், 878 காவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை சுமார் 97 ஆயிரம் போலீசார் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாகவும், 60 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனாவால் 17 காவலர்கள் உயிரிழந்தனர்.