எஸ் ஐ ஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் நாடு முழுவதும் குழப்பம் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் குடிமக்கள் தங்கள் பெயர்களை கண்டுபிடிக்க வாக்காளர் பட்டியலில் ஆயிரக்கணக்கான ஸ்கேன் செய்யப்பட்ட பக்கங்களை ஆராய வேண்டிய ஒரு அமைப்பை இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. எனவே இந்த எஸ் ஐ ஆர் என்பது வேண்டுமென்றே செய்யப்படும் ஒரு சூழ்ச்சி. இதன் மூலம் குடிமக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.