குட்கா விற்பனை - ஒருவர் கைது

24 October 2025

விழுப்புரம்: மளிகைக் கடையில் குட்கா விற்பனை - ஒருவர் கைது


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே ஆலகிராமம் பகுதியில் மளிகைக் கடையில் தடைசெய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளை விற்பனை செய்ததாக ராமமூர்த்தி (45) என்பவர் கைது செய்யப்பட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் உத்தரவின் பேரில், பெரியதச்சூர் போலீசார் நடத்திய சோதனையில், கடையில் சுமார் 34 கிலோ குட்கா பாக்கெட்டுகள் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.