திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் அந்த கட் கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்..
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் யார் யார் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வருகிறார்கள் என்பதை இப்போது கூற இயலாது என தெரிவித்தார். மேலும் பொங்கலுக்குள் அவர்களை தமிழக வெற்றி கழகத்தில் இணைப்பதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் ஓபிஎஸ் டிடிவி தினகரன் தெளிவாக இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் அழைத்தாலும் ஓபிஎஸ் அதிமுகவிற்கு செல்ல மாட்டார் என தெரிவித்த செங்கோட்டையன் அவர்கள் அழைக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தார்...