அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் நேற்று தனது எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் கட்சியில் இணைந்தார். இதனை ஒட்டி இன்று தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் கட்சியில் இணைய வருகை தந்த போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கட்சியின் தலைவர் விஜய் மற்றும் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகள் கட்சிய அலுவலகத்திற்கு வருகை தந்தனர். பின்னர் செங்கோட்டையன் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் தமிழக வெற்றிக்கழக கட்சியில் இணைந்தனர்.