எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்

26 November 2025

அதிமுக மூத்த நிர்வாகிகளில் ஒருவர் கே ஏ செங்கோட்டையன். இவர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக அமைப்பு செயலாளர் ஆக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் அண்மையில் இவருக்கும் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதேபோன்று அவருடைய ஆதரவாளர்களும் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். 

இந்த நிலையில் செங்கோட்டையன் இன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை செங்கோட்டையன் வழங்கினார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.