வழக்கு தொடர்வேன்: செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

02 November 2025

அண்மையில் அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் அதிரடியாக நீக்கப்பட்டார். இந்த நிலையில் செங்கோட்டையன் நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நான் 53 ஆண்டுகளாக கட்சிக்காக பணியாற்றியுள்ளேன் ஆனால் என்னிடம் விளக்கம் கேட்காமலே திடீரென என்னை நீக்கம் செய்தது வேதனையாக உள்ளது என தெரிவித்தார். மேலும் நான் இன்னும் அதிமுக தொண்டனாகவே உள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் என்னிடம் விளக்கம் கேட்காமல் நோட்டீஸ் எதுவும் அனுப்பாமல் கட்சியில் இருந்து நீக்கியது தவறு எனவே இது தொடர்பாக நீதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என தெரிவித்தார்.