அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்

01 November 2025

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று முன்தினம் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் மதுரையிலிருந்து பசும்பொன் சென்றார். பின்னர் அங்கு டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து ஓ பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் சசிகலாவை சந்தித்து பேசினார். இந்த விவகாரம் அதிமுக கட்சியில் மட்டுமின்றி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று கட்சியின் முக்கிய நிர்வாகிகளான கே பி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி
 செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டார். இந்த விவகாரம் அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.