நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில் திருத்தணி சென்ற சென்னை புறநகர் ரயிலில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி சிராஜ் மீது போதைப் பழக்கத்திற்கு அடிமையான நான்கு இளம் சிறார்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ள கொடூர காட்சிகள் நெஞ்சே உலுக்குகிறது என தெரிவித்தார். மேலும் தமிழிளம் தலைமுறையை எந்த அளவிற்கு மிக மோசமாக சீரழித்துள்ளது என்பது ஏன் இந்த தாக்குதல் காட்டுகிறது என தெரிவித்துள்ள சீமான் அத்தனை சமூக அவலங்களுக்கும் அடிப்படையாக இருக்கும் போதே பொருட்கள் விற்பனையை தடுத்து நிறுத்தாத வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் கையாலாகாத்தனம் வன்மையான கண்டனத்துக்குரியது என தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாட்டில் அரசே நடத்தும் மலிவு விலை மது கடைகளால் சட்டம் ஒழுங்கு சீரழிந்து இது போன்ற குற்றங்கள் வேகமாக பெருகி வருகின்றன என தெரிவித்த சீமான், வடமாநில தொழிலாளி சராஜ் மீதான கொலைவெறி தாக்குதல் போல இனி ஒரு கொடூர நிகழ்வு நடந்திடாமல் தடுக்க உடனடியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்தி டாஸ்மாக் கடைகளை இழுத்து மூட வேண்டும் என வலியுறுத்துகிறேன். என தெரிவித்துள்ளார்....