ஒரே மேடையில் 234 வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தும் நாம் தமிழர் கட்சி

20 February 2026

தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, திருச்சியில் நாளை நடைபெறவுள்ள பிரம்மாண்ட மாநாட்டில், தமிழகத்தின் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை சீமான் ஒரே மேடையில் அறிமுகம் செய்யவுள்ளார். கடந்த தேர்தல்களைப் போலவே இம்முறையும் 117 பெண் வேட்பாளர்கள் மற்றும் 117 ஆண் வேட்பாளர்கள் என சம உரிமை அடிப்படையில் வேட்பாளர் பட்டியல் அமையவுள்ளது. முந்தைய தேர்தல்களில் தொடர்ந்து தனது வாக்கு சதவீதத்தை உயர்த்தி வரும் நாம் தமிழர் கட்சி, வரும் 2026 சட்டசபைத் தேர்தலையும் தனித்தே எதிர்கொள்ளும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த வேட்பாளர் அறிமுக நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.