கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்: சீமான் கடும் கண்டனம்

25 December 2025

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். 

அதில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மற்றும் மத்திய பிரதேசம் ஜபல்பூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தடுத்து நிறுத்தி கிறிஸ்துவ மக்கள் மீது இந்துவத்துவ அமைப்புகளால் நடத்தப்பட்ட கோரத் தாக்குதல் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார். 

மேலும் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பெருநாள் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்திய பெருநாட்டில் இத்தகைய கொடும் தாக்குதல் நடைபெற்ற உள்ளது இந்திய நாட்டின் அனுமதிப்பையே கேள்விக்குள்ளாகி இருக்கிறது என்று தெரிவித்த சீமான் என்ன செய்கிறது ஒன்றிய உள்துறை அமைச்சகம் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பிரதமர் மோடியும் உள்துறை மந்திரி அமிர்தாவும் இதுவரை கண்டனத்தை கூட தெரிவிக்காதது கள்ள மவுனம் சாதிப்பது ஏன் வெட்கக்கேடு எனவும் அவர் தெரிவித்துள்ளார்...

ஆகவே இத்தகைய தாக்குதல்களை அந்தந்த மாநில அரசுகள உடனடியாக தடுத்து நிறுத்தவும் மத்திய பாஜக அரசு அதனை உறுதி செய்யவும் வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்....