சென்னை திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

03 December 2025

புயலின் காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர் மழை பெய்ததால் சாலைகளில் மற்றும் குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்தது. அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் போதிலும் இன்னும் சில இடங்களில் மழைநீர் அகற்றப்படவில்லை. 

மேலும் சென்னை மற்றும் திருவள்ளூரில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்த அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர்...