பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்ட ராணுவம்

22 December 2025

மேற்கு அமெரிக்காவில் அமைந்துள்ள நைஜீரியா நாட்டில் சமீப நாட்களாக அப்பகுதியில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகள் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்...

இதன் ஒரு பகுதியாக நைஜர் மாகாணம் பம்பரி நகரில் உள்ள பள்ளிக்கூடத்திற்குள் கடந்த 21ஆம் தேதி ஒரு மர்ம பயங்கரவாத கும்பல் துப்பாக்கியுடன் நுழைந்து அங்கிருந்து ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் என 315 பேரை கடத்திச் சென்றனர். 

இதனைத் தொடர்ந்து அந்நாட்டு ராணுவம் பள்ளி குழந்தைகளை மீட்க தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் பயங்கரவாதிகளிடமிருந்து 50 பள்ளி குழந்தைகள் தப்பினர். இதனைத் தொடர்ந்து இந்த மாத தொடக்கத்தில் 101 குழந்தைகளை பயங்கரவாதிகள் விடுதலை செய்தனர்.

இந்த நிலையில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி குழந்தைகளில் 130 பேரை ராணுவம் பல்வேறு போராட்டத்திற்கு பின் நேற்று மீட்டது.