கள்ளக்குறிச்சி மாவட்டப் பள்ளிகளுக்கு நாளை வேலை நாள் அறிவிப்பு கள்ளக்குறிச்சி, நவம்பர் 1 - கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கடந்த அக்டோபர் 22ஆம் தேதியன்று கனமழை காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு, நாளை (நவம்பர் 1, 2025) அனைத்துப் பள்ளிகளுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் மெட்ரிக், மேல்நிலைப் பள்ளிகள் என அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்று மாவட்டக் கல்வித் துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாளை பள்ளிக்குத் தவறாமல் வருகை புரியுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். இப்படிக்கு
கொற்றவை செய்தியாளர்
அ ஐயப்பன்