வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. மேலும் இது சென்னையிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இதன் காரணமாக நாளை ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு கலர் விடுக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக சென்னையில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று திருவள்ளூரிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.