"நான் நிச்சயம் வருகிறேன்" - வி.கே.சசிகலா

30 May 2021

அதிமுக-விற்குள் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக தகவல்கள் கிடைத்தபோதிலும் கட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற சூழலே நிலவுகிறது. வி.கே.சசிகலாவும் தான் அரசியலுக்கு வர வாய்ப்பில்லை என்றவுடன், ஒபிஸ் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு ஆளும் திமுக விற்கு ஆதரவாக சில கருத்துக்களை தனியாக தெரிவித்துக்கொண்டிருக்கிறார்.


 தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மட்டுமல்லாது கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் கூடுதல் கொரோனா சிகிச்சை மையங்கள், ஆக்ஸிஜன் வசதிகளையும் அரசு ஏற்படுத்தி வருகின்றது.
 
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இறந்தவர்கள் எண்ணிக்கையை அரசு குறைத்து காட்டுவதாக குற்றம் சாட்டியுள்ள எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இறந்தவர்கள் எண்ணிக்கையை அரசு வெளிப்படையாக வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 
ஆனால் மறுபுறம் ஓபிஎஸ், கொரோனா பரவலை தடுக்கும் பணியில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு, நல்ல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என பாராட்டியுள்ளார்.

இதற்கிடையில் திருமதி வி.கே.சசிகாலா கட்சி நிர்வாகி ஒருவரிடம்," நான் நிச்சயம் வருகிறேன். தைரியமாக இருங்கள். கட்சியை சரிசெய்து கொள்ளலாம். அனைவரும் கவனமாக இருங்கள்". என தொலைபேசியில் பேசிய ஆடியோ கசிந்து தீயாக பரவி அரசியலில் காட்டுத்தீயை பற்றவைத்துள்ளது.

ஓபிஎஸ் - ஸ்டாலின் நட்பு தொடருமா? இல்லை ஆட்டத்தை மாற்ற சசிகலா வருவாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.