சரத் பவார் உடல்நலக்குறைவு காரணமாக புனே மருத்துவமனையில் அனுமதி
09 February 2026
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான 85 வயதுடைய சரத் பவாருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புனே மாவட்டம் பாராமதியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்தபோது, அவருக்கு நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, நெஞ்சுப் பகுதியில் தொற்று (Chest Infection) ஏற்பட்டுள்ளதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். தற்போது அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.