மணல் கொள்ளை: விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

10 December 2025

தமிழகத்தில் மணல் கொள்ளை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் கனிமவள ஆணையர் மோகன் நேரில் ஆஜராகி மணல் கொள்ளையில் ஈடுபடுபவருக்கு எதிராக அபராதம் விதிக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும் ஆன்லைன் பதிவு முறை ஜிபிஎஸ் கண்காணிப்பு ஒலி தொடரின் காரணத்தால் மணல் கொள்ளை பெருமளவு தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.. 

இதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதிகள் அபராதம் விதிப்பது மட்டும் போதாது மணல் கொள்ளையில் ஈடுபடுபவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். 

மேலும் மணல் கொள்ளையை தடுப்பதற்கு குறிப்பிட்ட நடவடிக்கைகள் எடுத்திருந்தாலும் கூட அது போதுமானதாக இல்லை என தெரிவித்த நீதிபதிகள் மணல் கொள்ளையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்...