தனியார் பள்ளியை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து கொட்டும் மழையில் பெற்றோர்கள் பள்ளி மாணவர்கள் சாலை மறியல்.

30 November 2025

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையம் அருகில் தனியார் பள்ளிக்கூடம் வருகிறது இந்தப் பள்ளியில் சுமார் 2000 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் 
இந்த பள்ளிக்கூடம் வரும் டிசம்பர் 1ஆம் தேதி சமூக வலைதளங்களில் தகவல் பரவியதை அடுத்து அங்கு படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர்கள் பள்ளியை இடிக்க கூடாது என்றும் படிக்கும் பிள்ளைகளின் எதிர் காலம் பாதிக்கப்படும் என்றும் இன்னும் ஐந்து மாத காலம் அவகாசம் வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர்ந்து இரண்டு நாளாக பள்ளியைமுற்றுகை இட்டும் சாலை மறியல்செய்தும் வருகின்றனர் 

இந்த பள்ளியின் பிரச்சனை என்ன.

இந்தப் பள்ளியின் உரிமையாள ரான தண்டபாணி என்பவரின் உறவினரான முருகானந்தம் (வயது-41.) இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வந்தார் இவருக்கு திருமணம் ஆகவில்லை தாராபுரம் முத்துநகர் பகுதியில் தாயாருடன் வசித்து வருகிறார்.தண்டபாணி இவரின் சித்தப்பா ஆவார். இவர்களுக்குள் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. ஏற்கனவே தண்டபாணியின் குடும்பத்தார் சொத்து தகராறு காரணமாக முருகானந்தத்தின் தந்தையான லிங்குசாமி என்பவரை படு
கொலை செய்து விட்டதாக கூறப்படுகிறது தொடர்ந்து இவர்களின் சொத்து தகராறு நீடித்து வந்துள்ளது இந்நிலையில் முருகானந்தம் தன் சித்தபா தண்டபாணி தன் சொத்தை அபகரித்ததாகவும் முறையான அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக ஆக்கிரிமிப்பு செய்து தரமற்ற பள்ளிக்கூடம் கட்டியிருப் பதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளார் வழக்கு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்நிலையில் 

ஜூலை 28 2025 அன்று பிரச்சனைக்குரிய தனியார் பள்ளி அருகில் முருகானந்தம் இடத்தை அளவிடு செய்து கொண்டிருந்த போது ஐந்து பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் இந்த கொலை சம்பந்தமாக முருகானந்தத்தின் சித்தப்பா தண்டபாணி உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர் பின்னர் தண்டபாணியின் மகன் கார்த்திக்கும் கைது செய்யப்பட்டார் இப்படியான சூழ்நிலையில்தான் முருகானந்தம் தொடர்ந்த  வழக் கில் உச்சநீதிமன்ற உத்தரவின் பெயரில் ஆய்வுகள் செய்யப்பட்ட தாகவும் கூறப்படுகிறது அதைத் தொடர்ந்தே... சமூக வலைதளங் களில் டிசம்பர் 1ஆம் தேதி பள்ளிக் கூடம் இடிப்பதாக தகவல் பரவியது இதை அடுத்து தான் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர் கள் முதல் நாள் பள்ளியை முற்று கை  இட்டனர் தொடர்ந்து இரண்டு நாளாக கொட்டும் மழையிலும் பள்ளியை முற்றுகையிட்டனர் அவர்களுடன் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புனிதா அந்தோனி அம்மாள் பேச்சுவார்த்தை நடத்தி னர் பேச்சுவார்த்தையில் உடன் பாடு ஏற்படாததால் ஆவேசம் அடை ந்த பெற்றோர்கள் பள்ளி மாணவர் கள் சீருடையுடன் தாராபுரம் பஸ் நிலையம் அருகில் சாலை மறியல் ஈடுபட்டனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 

சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக போக்கு வரத்தும் பாதிக்கப்பட்டது மேலும் பெற்றோர்களின் சிலர் தாராபுரம் மேம்பாலத்திலும் மறியலில் ஈடுபட்டனர் இதைத் தொடர்ந்து அங்கு வந்த தாராபுரம் ஆர்டிஓ பெலிக்ஸ் ராஜா கூடுதல் போலீஸ் சூப்பிரண்ட் ராஜேந்திரன் துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர் மறியலில் ஈடுபட்ட வர்கள் ஒரு முடிவு தெரியாமல் கலைந்து செல்ல மறுத்தனர் பின்னர்

ஆர்டிஓ பெலிக் ராஜா 1-12-2925 திங்கட்கிழமை கோர்ட்டில் விசார ணை நடைபெற இருக்கிறது கோர் ட்டின் தீர்ப்பை பொறுத்து முடிவு செய்ய முடியும் என்றும் கூறினார் இதைத் தொடர்ந்து சுமார் 3 மணி நேரமாக நடந்த மறியல் போராட்ட த்தை கைவிட்டு விட்டு பெற்றோர் கள் அங்கிருந்து கலைந்து சென்ற னர் இந்த சாலை மறியல் காரண மாக வாகனங்கள் நீண்ட வரிசை யில் காத்திருந்ததால் பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட் டது இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாயினர்

மா.ஜாபர் அலி செய்தியாளர் திருப்பூர்