உக்ரேன் மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய ரஷ்யா

04 December 2025

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் கடந்த நான்கு ஆண்டுகளாகவே நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் முயற்சித்து வரும் நிலையில் போர் நிறுத்தம் தொடர்பான 28 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்மொழிந்துள்ளார். 


இந்த நிலையில் இன்று உக்கரனின் ஒடேசா பகுதியில் ரஷ்ய இராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஆறு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் இந்தப் பகுதி உக்கிரனின் எரிசக்தி கட்டமைப்பு பகுதிகளாகும். இதன் காரணமாக எரிசக்தி கட்டமைப்புகள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளன. மேலும் தொடர்ந்து அப்பகுதியில் மின் தடை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் உக்கிரன் எரிசக்தி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்...