டெல்லியில் நடந்து முடிந்த ரஷ்யா இந்தியா கூட்டு மாநாடு

05 December 2025

டெல்லியில் இந்தியா ரஷ்யா இடையிலான 23வது மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாரத பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புத்தின் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி பயங்கரவாதத்தை எதிர்க்க உலகளாவிய ஒற்றுமை தேவை பயங்கரவாதம் என்பது மனித குலத்தின் மீதான நேரடி தாக்குதல் என தெரிவித்தார்.
 மேலும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவும் ரஷ்யாவும் தோளோடு தோல் தோல் நின்று வருகின்றன என தெரிவித்தார்.


இதனை தொடர்ந்து ரஷ்ய அதிபர் புதின் செய்தியாளர்களிடம் பேசியபோது ரஷ்ய குழுவினருக்கு இந்திய ஜனாதிபதி பிரதமர் அளித்த அன்பான உபசரிப்புக்கு நன்றி என தெரிவித்தார். மேலும் பிரதமர் மோடி தலைமையில் இந்திய வேகமாக முன்னேறி வருகிறது என தெரிவித்த புதின் மோடி எனக்கு மிகவும் நம்பிக்கையான நண்பர். எங்களுக்குள் மிகவும் நம்பிக்கையான ஆழமான நட்பு உறவு இருக்கிறது என தெரிவித்தார்....