பாலம் உடைந்து மக்கள் அவதி

24 October 2025

திண்டிவனம்: பாலம் உடைந்து மக்கள் அவதி


கடந்த ஆண்டு புயலால் பாலம் அடித்துச் செல்லப்பட்டது. நகராட்சி நிர்வாகம் சார்பில் 8 இலட்சம் ரூபாய் செலவில் அமைத்த தற்காலிக சிமெண்ட் பாலம் சாதாரண மழையிலேயே உடைந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
மேலும் நிரந்தர பாலம் கட்டினால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படும் நிலையில், தற்போது பாலம் இடிந்துள்ள சூழலில் பொதுமக்கள் போக்குவரத்து வழி இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர்.
-செய்தியாளர்
ஆ.ஆகாஷ், விழுப்புரம்