பஞ்சாயத்து விடுத்த எச்சரிக்கை
23 October 2025
பஞ்சாயத்து விடுத்த எச்சரிக்கை :
விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணையின் நீர்மட்டம் 32 அடி கொள்ளளவு எட்டியுள்ளதால் வினாடிக்கு 3192 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதற்காக நீர்வளத்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அதனால் சங்கராபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் ஆற்றில் இறங்கவும் குளிக்கவும் கூடாது மீறினால் வழக்கு பதிவு செய்யப்படும் என கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்தின் சார்பாக ஒலிப்பெருக்கிகள் மூலம் எச்சரிக்கை செய்யப்பட்டது.
-செய்தியாளர்
ஆ.ஆகாஷ், விழுப்புரம்