 
	 
								செங்கல்பட்டு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் நெல் மூட்டைகள் நனைந்து நாசமாகியுள்ளன. குறிப்பாக செய்யூர் நீலமங்கலம் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததால் அனைத்தும் நாசமாகியுள்ளனர். இது மட்டும் இன்றி ஈரப்பதம் காரணமாக நெல் முளைப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நுகர் பொருள் வாணிப கழக அதிகாரிகள் இந்த நெல் மூட்டைகளை விரைவாக லாரிகளில் ஏற்றி சேமிப்பு கிடங்கில் பத்திரப்படுத்த வேண்டும் என விவசாயிகள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்...