பொது ரேஷன் கடை திறப்பு விழா

12 November 2025

தமிழ்நாட்டில் வறுமையை ஒழிப்பதில் மிக முக்கிய பங்காற்றும்  பொது விநியோக கட்டமைப்பை தமது தொகுதியில் மேலும்  வலுப்படுத்தும் நோக்குடன் செயல்பட்டு வரும் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர்  பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று மதுரை மாநகராட்சி  வார்டு எண்.75 ஜே.ஆர் சாலையில் தமது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடையினை மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார், தமது சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைத்திடும் 17 வது நியாய விலைக் கடையாகும் .