ரத்தக்கண்ணீருக்கு அங்கீகாரம்.
20 January 2026
1964ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய திரைப்பட ஆவண
காப்பகம் இந்திய திரைப்பட பாரம்பரியத்தை வருங்கால சந்ததிக்கு பாதுகாத்து கொண்டு செல்லுதல் திரைப்படங்களை வகைப்படுத்தி ஆவணப் படுத்தி ஆய்வு மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களை கொண்டு செயல்படுகிறது.
இந்த காப்பகத்தில் இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட நூல்கள் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட திரைப்பட கதைக்கான கையெழுத்துப் பிரதிநிதிகள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகைப் படங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இப்படிப்பட்ட பிரசித்தி பெற்ற காப்பகத்தில் தமிழ் மொழியில் 1954 ஆம் ஆண்டு வெளியான ரத்தக்கண்ணீர் என்ற திரைப் படமும் சேர்க்கப்பட்டுள்ளது .
நடிகர் வேல் என்று அழைக்கப்பட்ட எம் ஆர் ராதா நடிப்பில் உருவாகி இருந்த இப்படத்தை கிருஷ்ணன் -பஞ்சு இயக்கி இருந்தனர் .
இந்தப்படம் சமுதாயத்தில் நிலவும் பல மூடநம்பிக்கைகளை நகைச் சுவையாக சாடியிருந்தது.மிகப் பெரிய வெற்றிபெற்ற இந்த திரை ப்படத்தை இப்போது பார்த்தால் கூட அதன் வீரியத்தை உணர முடியும். இப்படிப்பட்ட இந்த அற்பு தமான திரைப்படத்தைதான் இந்திய தேசிய திரைப்பட ஆவண காப்பகத்தில் சேர்க்கப்பட்டு அதற் கான அங்கீகாரமும்
வழங்கப்பட்டுள்ளது.
மா.ஜாபர் அலி செய்தியாளர்.
திருப்பூர்.