திருநெல்வேலியில் வடமாநில பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு சிறார்கள் உட்பட மூன்று பேர் கைது

15 December 2025

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அரசர்குளம் பகுதியில் உள்ள தனியார் ஹாலோ பிளாக் தயாரிக்கும் நிறுவனத்தில் சில தினங்களுக்கு முன் அசாமை சேர்ந்த ஒரு தம்பதியினர் வேலைக்கு சேர்ந்துள்ளனர். அங்கு முகமது மஹ்புல் என்பவர் பிளாக் நிறுவன உரிமையாளரிடம் கமிஷன் தொகை பெற்றுக்கொண்டு அவர்களை வேலைக்கு சேர்த்து உள்ளார். அங்கு வேலை பிடிக்காததால் வேலையை விட்டு விலகுவதாக தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் நேற்று கேரளாவிற்கு செல்வதற்காக அரசர் குளத்தில் இருந்து ஆட்டோவில் திருநெல்வேலிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவரை தொடர்பு கொண்ட முஹம்மது மஹ்புல் அவர்களிடம் பேச வேண்டும் என கூறியதால் அவர்களை சிவந்திபட்டி பகுதிக்கு வரச் சொல்லியுள்ளார். 

பின்னர் தம்பதியினர் அங்கு சென்றதும் அவர்களை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு முகமது மஹ்புல் உட்பட மூன்று பேர் அந்தப் பெண்ணை தனது கணவர் முன்னிலையிலேயே கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் மூவரும் தப்பி ஓடிவிட்டனர். 

பின்னர் அந்தப் பெண் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தப்பி ஓடிய முகமது மஹ்புல் மற்றும் இரண்டு இளம் சிறார்களை அதிரடியாக கைது செய்தனர்.... இந்த சம்பவம் அப்பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...