தமிழகத்தின் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு
18 February 2026
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை (ராஜ்ய சபா) இடங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த இடங்களுக்கான தேர்தல் வரும் மார்ச் 5-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் பிப்ரவரி 16-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 23-ஆம் தேதி வரை நடைபெறும். தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை பிப்ரவரி 24-ஆம் தேதி நடைபெறும் என்றும், வேட்புமனுக்களைத் திரும்பப் பெற பிப்ரவரி 26-ஆம் தேதி கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 5-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்று, அன்றைய தினமே மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்தின் அடிப்படையில், திமுக கூட்டணிக்கு 4 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு 2 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.