காஷ்மீரில் ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 10 வீரர்கள் பலி - மந்திரி ராஜ்நாத் சிங் இரங்கல்
22 January 2026
ஜம்மு - காஷ்மீரின் டோடா பகுதியில் 17 ராணுவ வீரர்களுடன் சென்ற வாகனம் எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 200 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 10 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; மேலும் 7 வீரர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த துயரமான சம்பவத்திற்கு மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், வீரர்களை இழந்தது நாட்டிற்கு பெரும் இழப்பு என்றும், காயமடைந்தவர்களுக்குச் சிறந்த சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த இக்கட்டான நேரத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருடன் தேசம் துணை நிற்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.