 
	 
								மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய் சால்மரில் நடைபெற்ற ராணுவ தளபதிகள் மாநாட்டில் கலந்து கொண்டார். மேலும் இந்த மாநாட்டில் பாதுகாப்பு படை தலைவர் ஜெனரல் அணில் சவுகான், ராணுவ தலைமை தளபதி ஜென்ரல் உபேந்திர திவேதி உள்ளிட்ட பல்வேறு ராணுவ தளபதிகளும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மேடையில் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெறும் ராணுவ நடவடிக்கையாக மட்டுமல்லாமல் நாட்டின் தைரியம் மற்றும் கட்டுப்பாட்டின் அடையாளமாக வரலாற்றில் இடம் பிடிக்கும் என தெரிவித்தார். மேலும் நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க 24 மணி நேரமும் காவலில் நிற்கும் வீரர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.